2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மல்லாவியில் அம்மாச்சி திறப்பு

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - மல்லாவி நகரில், நாளை (02), அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, அம்மாச்சி உணவகத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம், அம்மாச்சி உணவகத்துக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாயப் பயிற்சி நிலையக் கட்டடமும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .