Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில், கடந்த சில நாள்களாக நீடித்த மழையுடனான வானிலை காரணமாக, குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த 34 ஹெக்டெயர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக, பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பி.அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால், பல்வேறு இடங்களிலும் விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், கிளிநொச்சி நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளதாகக் கூறினார்.
பெரிய மற்றும் நடுத்தரக் குளங்களின் கீழ் 12 ஆயிரத்து 255 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும் சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 544 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும், அதேபோல, மானாவாரியாக 11 ஆயிரத்து 696 ஹெக்டெயரிலுமென, மொத்தமாக 26 ஆயிரத்து 495 ஹெக்டெயர் நிலப்பரப்பில், இம்முறை காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக, 34 ஹெக்டெயர் பயிர்ச்செய்கை முழுமையாகவும் 72 ஹெக்டெயர் பயிர்ச்செய்கை, 70 வீதமான அழிவுகளையும் எதிர்நோக்கியுள்ளதாக, தமது திணைக்களத்தால் அறிக்கையிடப்பட்டு இருப்பதாகவும் கூறிய அவர், மழையுடனான வானிலையால், கபில நிறம் மற்றும் எரிபந்தம் ஆகிய நோய்த் தாக்கங்களும் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்நோய்த் தாக்கங்கள் இனங்காணப்பட்டு, அவை தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, இந்நோய்த் தாக்கங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, அவர் மேலும் கூறினார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago