Editorial / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலை தொடர்நதுள்ள நிலையில், வர்ணபகவானுக்கு பெரிய பூஜைடயொன்றை நடத்தி, முல்லைத்தீவுக்கும் கிளிநொச்சிக்கும் இன்னும் ஒரு மாதத்துக்குள் மழை வரவேண்டும் என வேண்டவுள்ளதாக, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு – நாயாற்று பகுதியில், வாடிகள் எரிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்று (29) மீன்பிடி வலைகளை வழங்கிவைத்து உரையாற்றும் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 2014ஆம் ஆண்டில் இருந்து கிளிநொச்சிக்கு மழை பெய்வதில்லையென அப்பகுதி மக்கள் கூறியதாகத் தெரிவித்த அவர், அதற்கு இங்கு பெரிய பூஜையொன்றை நடத்தி, யாகம் ஒன்றை வைத்து, வர்ணபகவானுக்கு பூஜை செய்ய வேண்டுமென அம்மக்களிடம் தான் தெரிவித்தாகவும் அதற்கான திகதியொன்றை குருக்கள் அவர்களுடன் தொடர்புகொண்டு குறித்துள்ளதாகவும் கூறினார்.
35 minute ago
38 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
38 minute ago
56 minute ago
1 hours ago