2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மழையால் 610 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

க. அகரன்   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 610 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் 560 குளங்களின் கீழ் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதில், கடந்த ஒரு மாத காலப்பகுதியில் பெய்த மழை காரணமாக 300 குளங்கள் நீர் நிறைந்து வான் பாய்ந்துள்ளன.  மழை மற்றும் வான் பாய்ந்தமை காரணமாக 610 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. அழிவடைந்த நெற்செய்கை நிலங்களில் மக்கள் மீளவும் பயிரிட்டுள்ளனர்.

அழிவு விபரங்கள் பெறப்பட்டு அமைச்சுக்கும், திணைக்களத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .