2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘மஹிந்தவின் அட்சி காலத்தில் 13 ஆயிரம் பேர் விடுதலையாகினர்’

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில், 13 ஆயிரம் வரையான பிள்ளைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், தற்போதைய அரசாங்கங்கத்தால் ஒருவரும் விடுதலை செய்யப்படவில்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சி செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில், ஜனாதிபதி தேர்தலுக்கான முதற்கட்ட மக்கள் கூட்டங்களும் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலனான சந்திப்புகளும் இளைஞர் அணியினருடனான சந்திப்புகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில், நேற்று (08) முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, பாண்டியன்குளம், துணுக்காய், விசுவமடு, முல்லைத்தீவு, வெலிஓயா ஆகிய பிரதேசங்களில்இந்த சந்திப்புகளும் கூட்டங்களும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், ஒரு காலத்தில் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தலையில் தூக்கிவைத்து செயற்பட்டதாகவும், தானும் அதில் இருந்ததாகவும் கூறினார்.

சிறையில் வாடுகின்ற பிள்ளைகளில் 13 ஆயிரம் பேர் வரையானோர் மஹிந்தவின் அட்சி காலத்தில் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தால் எவரும் விடுதலை செய்யப்படவில்லையெனவும் கூட்டமைப்பு இணைந்து கொடுத்திருந்தால் இன்று பலர் விடுதலையாகிருப்பரெனவும் கூறினார்.

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து கூட்டமைப்பு சிந்திக்கவில்லையெனக் குற்றஞ்சாட்டிய அவர், இப்போது பொக்கற்றில் வாங்கி வைத்துக்கொண்டு ஒருபக்கம் சாய்ந்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X