Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
முல்லைத்தீவில், கடற்படையினர் மக்களின் காணிகளை மாத்திரம் கையகப்படுத்தாமல், மக்களுக்கு ஜீவனோபாயத்துக்காக வழங்கப்பட்ட மாடுகளையும் கையகப்படுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமினுள் அடைபட்டுள்ள கால்நடைகளைப் பிடித்து, உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு, பிரதேசச் செயலகத்துக்கு கடற்படையினர் அனுமதி வழங்கியபோதும், அதனை நிறைவேற்ற பிரதேசச் செயலகம் தவறிவிட்டதாக, கால்நடை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த கடற்படைத் தளம் அமைந்துள்ள 617 ஏக்கர் காணிக்குள், சுமார் நூறு மாடுகள் அகப்பட்டுள்ளன. அவற்றை மீட்டுத்தருமாறு கடந்த 2 ஆண்டுகளாக, மாவட்டச் செயலகம் ஊடாக கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, முகாம் பகுதிக்குள் அகப்பட்டுள்ள கால்நடைகளைப் பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து கால்நடைகளைப் பிடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.
அந்த முயற்சியின் போது, சுமார் 10 மாடுகள் கூட பிடிக்கப்படவில்லை. இதையடுத்து, அந்த முயற்சி கைவிடப்பட்டது.
அது குறித்து கரைத்துரைப்பற்று பிரதேசச் செயலாளர் தெரிவிக்கையில்,
கடற்படை முகாமுக்குள் அகப்பட்டுள்ள கால்நடைகளைப் பிடிப்பதற்கு முகாம் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அதற்கான அனுமதி பெறப்பட்டதாகத் தெரிவித்த அவர், அதன் பயனாக முன்னாள் பிரதேசச் செயலாளர் மாடுகளைப் பிடிக்கக்கூடியவர்களை அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.
முதலில் தடம் வைத்து பிடிக்க முயன்ற போது, ஒரு மாடு மாத்திரமே அகப்பட்டதாகவும் அதன் பின்னர் நேரடியாகவே துரத்திப் பிடித்த போது, 7 மாடுகள் மட்டுமே பிடிக்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, மாடுகளைப் பிடிப்பவர்கள் தமது பிடி கூலிக்கு இந்த மாடுகளைப் பிடிப்பது பொருந்தாதெனக் கைவிட்டுச் சென்றதாகக் குறிப்பிட்டதுடன், இதன் காரணத்தாலேயே குறித்த பணி தடைப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், மீண்டும் கடற்படை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, அவற்றைப் பிடிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு, கால்நடைகளைப் பிடித்து, அவற்றை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, அவர் மேலும் கூறினார்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025