Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - கரைச்சிப் பிரதேசச் சபைக்குட்பட்ட கோரக்கன்கட்டுப் பகுதியில் உள்ள கொள்களத்தில், சட்டவிரோதமான முறையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தெரியவந்துள்ளது.
இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் தினமும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றது.
அதாவது, உரிய மருத்துவ அறிக்கைகள் இன்றி, இரவு வேளைகளில் மாடுகள் கொண்டுவரப்பட்டு வெட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கோரக்கன்கட்டு, முரசுமோட்டை, பன்னங்கண்டி மற்றும் பரந்தன் ஆகிய பகுதிகளில், வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் இரவு வேளைகளில் திருடப்படுவதாகவும் இவ்வாறு திருடப்படும் கால்நடைகள் குறித்த கொள்களன் பகுதிக்குக் கொண்டுச் சென்று வெட்டப்படலாமெனவும் பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துரைத்த கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன், இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரடியாகச் சென்று பார்வையிட்டபோதாகவும் தெரிவலித்தார்.
இதன்போது, பசு மாடுகள் உரிய மருத்துவ அறிக்கைகள் இன்றி வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இங்கிருந்து வெட்டப்படும் இறைச்சி, எந்த அனுமதியுமின்றி தினமும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதும் தெரியவந்துள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
23 minute ago
37 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
38 minute ago
1 hours ago