2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கு இடையூறு: 4 இளைஞர்கள் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - வைரவபுளியங்குளம், குருமன்காடு, பூங்கா வீதிகளில், மாலை வேளைகளில், தனியார்க் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்களை பயமுறுத்தும் பாணியில் செயற்பட்டு வந்த 4 இளைஞர்களை, வவுனியா போக்குவரத்து பொலிஸார், நேற்று (10) கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 4 மோட்டார் சைக்கிள்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இளைஞர்கள், நீண்டகாலமாக, இவ்வாறு தனியார்க் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்களை பயமுறுத்தும் பாணியில் செயற்பட்டு வந்தனரென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக போக்குவரத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென,  வவுனியா போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .