2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

மாணவி துஷ்பிரயோகம்; பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அ.கரன்

நொச்சிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலய ஆசிரியர் ஒருவரால் மாணவியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும், நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரசே மக்களால் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று (09) காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து, சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஓமந்தை பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸாரிடம் மகஜரொன்றையும் கையளித்ததுடன், தமது கோரிக்கை தொடர்பிலும் எடுத்தியம்பியிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

“குறித்த சிறுமியின் தாயாரின் நடத்தையின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற காரணமாகியுள்ளது. எனவே, தாயாருக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதுடன், குறித்த ஆசிரியருக்கு இவ்வாறான சம்பவம் 11ஆவது தடவையாகும். எனினும், உயர் அதிகாரிகள் அவருக்கான தண்டனையை வழங்காது இடமாற்றங்களை மாத்திரம் வழங்கியமையானது, அவர் தொடர்ச்சியாக சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடக் காரணமாகவுள்ளது.

“எனவே, ஆசிரியருக்கு தகுந்த தண்டனை விரைவாக வழங்கப்பட வேண்டும். அத்துடன், சில ஊடகங்கள் குறித்த மாணவி, நொச்சிக்குளம் கனிஸ்ட உயர்தர பாடசாலையை சேர்ந்தவர் என தவறாக செய்தியை வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக ஆராயாமல் குறித்த பிரசேத்துக்கு வராமல் இச் செய்தியை வெளியிட்டமையானது, எமது கிராம பாடசாலை மணாவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எனவே, சில ஊடகங்களின் போக்கு தொடர்பில் நாம் விசனம் கொள்கின்றோம். இது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெவித்தனர்.

கடந்த மாதம் 29ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அலைகல்லுப்போட்டகுளத்தை சேர்ந்த மாணவியொருவரை வைத்தியர்கள் பரிசோதனைக்குட்படுத்தியபோது, அம்மாணவி கற்பமாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஓமந்தை பொலிஸார் குறித்த மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டபோது, நொச்சிக்குளம் கனிஸ்ட உயர்தர பாடசாலை ஆசிரியரான குமாரசிங்கம் இந்திரசிங்கம் என்ற 50 வயது ஆசிரியரே காணம் என தெரியவந்ததையடுத்து, குறித்த ஆசிரியரை ஓமந்தை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .