2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

மாநாட்டு மண்டப கட்டடம் திறப்பு

Yuganthini   / 2017 ஜூலை 02 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாநாட்டு மண்டபக் கட்டடத்தை, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, சனிக்கிழமை (01) திறந்து வைத்தார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர், பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிட்ணி ஜயரத்ன, வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவனேசன், பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .