Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 11 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் திருக்குறள் விழா, பிரதேச செயலாளர் ந.ரஞ்சனா தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (09) நடைபெற்றது.
மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நலன்விரும்பிகளின் அனுசரணையுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், திருவள்ளுவர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து விழாவை ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன், திருவள்ளுவர் தோற்றத்துடன் நிகழ்விற்கு வருகை தந்திருந்த பள்ளி சிறுவன், பல்லாக்கில் தூக்கி வரப்பட்டு, நிகழ்வு நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்கு விருந்தினர்களுடன் அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து குறள் வாழ்த்து இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கை பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்த மேலதிக மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத் திட்டமிடல்ப் பணிப்பாளர் திருமதி ம.கிரேசியன் வில்வராஜா,கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்ட பொறியியலாளர் வவுனிக்குளம் கை.பிரகாஸ் மற்றும் மு/பாலிநகர் மகாவித்தியாலய அதிபர் ஶ்ரீகமலநாதன் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து ஏனைய அதிதிகளும் மங்கள விளக்கை ஏற்றினர்.
தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்று, ஆரணி நர்த்தனாலய மாணவர்களின் வரவேற்பு நடனமும்,மாணவர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டன. (N)
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago