Niroshini / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளரை இடமாற்றக் கோரி, மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக, இன்று (27) காலை 11 மணியளவில், அடையாள கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆதி அருணாச்சலம் தலைமையில், சபை உறுப்பினர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளரின் ஆளுமையற்ற செயற்பாட்டாலும், வினைத்திறன் அற்ற முடிவுகளாலும், அபிவிருத்திகள் மற்றும் வேலைத் திட்டங்கள் அனைத்தும் பின் நோக்கி காணப்படுவதாகவும் எழுத்து மூல செயற்பாடுகள் மட்டுமே இடம்பெறுவதாகவும் பௌதீக செயற்பாடுகள் எவையும் இடம்பெறுவதில்லை எனவும் தெரிவித்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பாக கொள்வனவுகள், எரிபொருள் விற்பனைகள் என்பவற்றில் ஊழல் மேற்கொண்டுள்ளதாகவும், பொராட்டக்காரர்கள் கூறினர்.
அதை உறுப்பினர்கள் உறுதிப்படுத்தி வழங்கிய போதும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
23 minute ago
28 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
38 minute ago