2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மானிய உரம் கிடைக்காத நிலையில் கஞ்சிரமோட்டை விவசாயிகள்

Niroshini   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முள்ளியவளை தெற்கு கமக்கரா அமைப்பின் கீழ் உள்ள காஞ்சிரமோட்டை குளத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, இதுவரை அரசாங்கத்தின் மானிய உரம் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளார்கள்.

காஞ்சிரமோட்டை குளத்தின் கீழ் காலபோக நெற்செய்கையாக 90.5ஏக்கர் செய்கையினை 25 விவசாயிகள் மேற்கொண்டுள்ளார்கள்.

நெல் விதைத்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், கமக்கார அமைப்பினரால் விவசாயிகள் உறுதிப்படுத்தி படிவம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள போதும், இதுவரை மானிய உரம் வழங்கப்படவில்லை இதனால் நெற்பயிர்கள் அழிவடைந்து விளைச்சல் இல்லாத நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் மேலும் அவர்கள் தெரிவிக்கையில் காஞ்சிரமோட்டை கமக்கார அமைப்பின் தலைவரின் கால்நடை சென்று ஒரு விவசாயியின் நெற்பயிர்களை மேற்துள்ளதை தொடர்ந்து விவசாயி கமநலஅபிவிருத்தி உத்தியோகத்திரடம் முறையிட்டுள்ளதை தொடர்ந்து, அதனை மூடி மறைப்பாதற்காக அவருக்கு பசளையினை வழங்கியுள்ளார்கள்.

ஏனைய விவசாயிகளுக்கான பசளை இதுவரை வழங்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கும் எழுத்துமூலம் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

முள்ளியவளை கமக்கார அமைப்பின் கீழ் உள்ள 5 குளங்கள் காணப்படுகின்றன. கூட்ட அறிக்கையின் படி பயிர்நிலங்களுக்கான வேலி  இதுவரை கட்டப்படவில்லை. மற்றைய நான்கு குளங்களுக்கும் பசளை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காஞ்சிரமோட்டை குளத்தின்கீழ் உள்ள ஒரு விவசாயை தவிர்ந்த எனைய 24 விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .