Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாவட்ட செயலாளர் சோமரத்தின விதான பத்திரனவை, வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று (13) சந்தித்தனர்.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிதாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதை நிராகரித்து, வவுனியா அரசாங்க அதிபரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறியதாவது,
“கடந்த காலங்களில், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவானது, வவுனியா மாவட்ட செயலகத்தில் முழுமையான பதிவுகளை மேற்கொண்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் ஜனாதிபதியும் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
“எனவே, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக உடனடியாக எமக்கு நல்லாட்சி அரசாங்கம் பதில் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
12 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago