2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மாவட்டச் செயலகத்துக்கு எதிராக மேன் முறையீடு

Editorial   / 2019 மே 07 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தால், தகவலறியும் சட்டம் உதாசீனம் செய்யப்பட்டமைக்கு எதிராக, நேற்று (06) மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திடம் கோரப்பட்ட தகவல்களை வழங்காது, குறித்தச் சட்டத்தை உதாசீனம் செய்யும் வகையில் மாவட்டச் செயலகம் நடந்துகொள்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே, இவ்வாறு மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தகவலறியும் சட்டத்தின் ஊடாக, மார்ச் 12ஆம் திகதியன்று, மாவட்டச் செயலகத்திடமிருந்து சில தகவல்களைக் கோரி, ஊடகவியலாளர் ஒருவர் விண்ணப்பத்தைகச் சமர்ப்பித்திருந்தார். இருப்பினும் , விண்ணப்பித்த திகதியிலிருந்து 28 வேலை நாள்களுக்குள் கோரப்பட்ட தகவல்கள் குறித்த ஊடகவியலாளருக்கு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, இது தொடர்பில், விண்ணப்பதாரியான ஊடகவியலாளர், நேற்று (06) தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம், குறித்தளிப்பட்ட அலுவலரிடம் மேன்முறையீடு செய்துள்ளார்.

இதேவேளை, மற்றுமோர் ஊடகவியலாளர் உள்ளிட்ட சிலர், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திடம் சில தகவல்களைக் கோரி, ஏப்ரல் 12ஆம் திகதியன்று, விண்ணப்பங்களைச் செய்திருந்த போதும், இதுவரை அவர்களுக்கும் எவ்வித பதில்களும் அனுப்பப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .