2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மாவட்டச் செயலாளரின் கூற்றை மறுத்தார் பிரதமர்

Editorial   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருந்த எவ்வித அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தான் தடை விதிக்கவில்லையெ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று, முல்லைத்தீவு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நேற்று (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

வன்னி மாவட்ட நாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றதில் பேசி அங்கிருந்து மத்திய அரசாங்கத்தின் ஊடாக மாவட்ட அபிவிருத்திக்கு கொண்டுவரப்படும் நிதிகளை, அரச திணைக்களங்கள் சரியான முறையில் பயன்படுத்தாதன் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பல மில்லியன் ரூபாய் நிதிகள் திரும்பிசென்றுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், இதன்போது குற்றஞ்சாட்டினார்.

அரச திணைக்களங்களின் அசமந்த போக்கு காரணமாக, மக்களுக்கான அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதிகள், திரும்பிசெல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, இதற்கான விளக்கத்தை மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் பிரதமர் கோரியபோது, அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்துக்கு அமையவே, வேலைத்திட்டங்கள் தடைப்பட்டனனெவும் அதனாலேயே நிதி திரும்பி சென்றதாகவும் பதிலளித்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர், தான் அவ்வாறு எவ்வித தடையும் விதிக்கவில்லையெனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .