2025 மே 09, வெள்ளிக்கிழமை

மின்சாரம் தாக்கி பெண் பலி

Niroshini   / 2021 ஜூலை 08 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட சுதந்திரபுரம், கொலனி பகுதியில், நேற்று (07) மின்சாரம் தாக்கி இளம்தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தோட்டத்தில், வேலை செய்துகொண்டிருந்த போதே, இவ்வாறு மின்சாரம் தாக்கி, குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

மின்சார கசிவு காரணமாக இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X