Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆசனப் பங்கீட்டில் தொடர்ந்தும் அநீதி அழைக்கப்பட்டு வருவதால் கடும் அதிருப்தியடைந்திருக்கும் புளொட் கூட்டமைப்பு, ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் நேற்று (18) நடைபெற்ற கூட்டத்தலிருந்தும் வெளிநடப்புச் செய்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தீர்மானிப்பது தொடர்பிலான கலந்துரையாடல், கிளிநொச்சியில் நேற்று (18) இடம்பெற்றது.
இதன்போது, ஏற்கெனவே தலைமைகள் கூடி முடிவெடுத்ததன் அடிப்படையில், தலைமை வேட்பாளரைக் கொண்ட கட்சி 60 சதவீதமும் ஏனைய இரண்டு கட்சிகளுக்கு தலா 20 சதவீதமும் ஆசனப்பங்கீடு வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நேற்று நடைபெற்ற கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தலைமை வேட்பாளர்களைப் பெற்றுக்கொண்டு, ஏற்கெனவே தீர்மானித்த 20 சதவீதத்தை கூட வழங்காத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடும்போக்காகச் செயற்பட்ட காரணத்தால், தாம் கூட்டத்திலிருந்து வெளியேறியதாக, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
5 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago