2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மீள இயங்க ஆரம்பித்துள்ள சந்தை

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரிப்பகுதியில் கடந்த காலத்தில் நெல்சீப் திட்டத்தின் கீழ், பல மில்லியன் ரூபாய் செலவில் பொருத்தமற்ற இடத்தில் அமைக்கப்பட்ட சந்தை மூடப்பட்டு வாடியடிப்பகுதியில் மீள இயங்க ஆரம்பித்துள்ளது.

கிளிநொச்சி, பூநகரிக்கான பொதுச்சந்தை கடந்த யுத்தகாலத்திற்கு முன்னர் வாடியடிப்பகுதியில் இயங்கியதுடன், இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வைத்தொடர்ந்து, குறித்த சந்தையை வாடியடியில் அமைக்குமாறு, முன்னாள் அரசாங்க அதிபர் தி.இராசநாயகம் மற்றும் பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்தபோதும்,முன்னைய ஆட்சிக்காலத்திலிருந்த அரசியல்வாதிகளும் அப்போதைய ஒருங்கிணைப்புக்குழுவும் பூநகரிப் பிரதேசத்திற்கான சந்தையை பிறிதொரு இடத்தில் அமைத்தவுடன், நெல்சீப் திட்டத்தின் கீழ், 23 மில்லியன் ரூபாய் செலவில் இதற்கான சந்தைக் கட்டடத்தொகுதியினையும் அமைத்து திறந்து வைத்தனர்.

இவ்வாறு திறந்து வைக்கப்பட்டபோதும்பொருத்தமான இடத்தில் சந்தை அமையாமையினால், சந்தை கொண்டுநடத்துவதில் பிரதேச சபை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதுடன், வர்த்தகர்களும் நட்டத்தை எதிர்கொண்டு வர்த்தக நடவடிக்கைகளையும் கைவிட்டனர்.

நீண்டகாலமாக செயலிழந்த நிலையில் காணப்பட்ட இச்சந்தை தற்போது ஏற்கனவே இயங்கி வாடியடிப் பிரதேசத்திற்கு மாற்றப்பட்ட குறித்த பகுதியில், கடந்த வாரம் முதல் சந்தை இயங்க ஆரம்பித்தது. தற்காலிகக் கடைகளை அமைக்கின்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X