2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

‘மீளக்குடியமர முடியாத மக்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்’

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

 

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில், கண்ணிவெடி அகற்றாததால் மீளக்குடியமர முடியாத மக்கள், பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு, பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (16) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், மேலும் கூறியதாவது,

“போர் இடம்பெற்ற காலத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவடி தற்போதும் அகற்றப்படாத காரணத்தால், சில கிராமங்கள் போர்  நிறைவடைந்து 9 ஆண்டுகள் ஆகின்ற போதும், இதுவரை அப்பகுதிக்கு மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

“மாவட்டத்தில், இந்தப் பிரதேதசம் மிகவும் ஆபத்தான வெடிபொருட்கள் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் படிப்படியாக வெடிபொருட்களை அகற்றி மக்கள் மீள்குடியமர்வுக்காக அவர்களின் காணிகளை ஒப்படைத்து வருகின்றனர்.

“இந்த நிலையில், தற்போது கண்ணிவெடி அகற்றப்படாத கிராமத்தில் உள்ள மக்கள், அது தொடர்பில் பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X