2025 மே 01, வியாழக்கிழமை

’மீளவும் தூபி நிர்மாணிக்க வேண்டும்’

Niroshini   / 2021 ஜனவரி 10 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

-நடராசா கிருஸ்ணகுமார்

யாழ். பல்கலைக்கழகத்தில், மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ். மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ், அவ்வாறு அத்தூபியை நிர்மாணிக்கும் போது, இவ்விடத்தில் இருந்த நினைவுதூபி அழிக்கப்பட்டது என்ற ஆதாரத்தைக் கொண்டமைந்ததாக நிமரவேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன், வரலாற்றில் நடக்கின்ற அநீதிகள் எல்லாம் அதில் ஆவணப்படுத்தப்பட வேண்டுமெனவும், தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், போரில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானவர்களை நினைவுகூரும் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி, அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமையவே, இடிக்கப்பட்தென்றார்.

மக்கள் கொல்லப்படுவதை எந்தளவுக்கு இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டதோ, அந்தளவுக்கு படுகொலைக்களுக்கு பொறுப்புச்சொல்லவும் முடியாது என்ற தகவலை சர்வதேசத்துக்கு சொல்லியுள்ளதெனவும், அவர் சாடினார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள தூபி அழிக்கப்பட்டதன் மூலம் நினைவுகூறும் சுதந்திரத்தை மறுத்தல் என்பதற்கு மேலாக, போரின் அடிப்படையிலான தடயங்கள் இருக்கக் கூடாது என்பதை வெளிப்படுத்துகிறது, எனவும், தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .