2025 ஜூலை 30, புதன்கிழமை

மீள்குடியேற 233 பேர் பதிவு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 17 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகமாலை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் மீள்குடியேற 233 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தவைர்களான சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு பல இடங்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இவ்வாறு இதுவரை விடுவிக்காத பகுதிகளில் மீள்குடியேறுவதற்காக 233 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு கடந்த வருடமும் விடுவிக்காத பகுதிகளில் குடியமர என குறைந்தளவான குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டனர். எனினும் அப்பகுதி விடுவிக்கப்பட்ட பின்னர் 78 குடும்பங்கள் குடியமர்ந்துள்ளனர்.

இவர்கள் தற்காலிக வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் உட்பட வசதிகளை பெற்று தருமாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

மீள்குடியேற்ற அமைச்சு அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .