Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 14 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும், கவனம் செலுத்துமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு, செல்வம் அடைக்கலநாதன், இன்று (14) அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு, முகாம்களில் உள்ள இலங்கை வாழ் தமிழ் மக்களின் சிரமங்களையும் கஷ்டங்களையும் தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வந்து, அதற்கான தீர்க்கமான சாத்திகமான முடிவுகளை எடுக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றேனெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த குடும்பங்களின் ஒரு சில குடும்ப தலைவர்கள் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கிறார்களெனத் தெரிவித்துள்ள செல்வம் எம்.பி, இவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளனரெனவும் கூறியுள்ளார்.
முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இவர்களுடைய மன ஆதங்கத்தை கருத்தில் கொண்டு இவர்களுடைய விடுதலைக்காகவும் மேலான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் எனவும் நான் நம்புகிறேன்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago