2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முகமாலைக்கு நீதவான் விஜயம்

Niroshini   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - முகமாலை  பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் ஆகியவற்றை, இன்று (14), நீதவான் பார்வையிட்டுள்ளார்.  

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது, சனிக்கிழமையன்று (11), தமிழீழ விடுதலைப் புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


குறித்த பொருள்கள் தொடர்பில், பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பளை பொலிஸாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், கிளிநொச்சி நீதவான், இன்று(14) குறித்த பகுதிக்குச் சென்று, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் என்பவற்றை பார்வையிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X