2025 மே 02, வெள்ளிக்கிழமை

முதியவர் பொல்லால் தாக்கி கொலை; பணம் கொள்ளை

Freelancer   / 2023 ஏப்ரல் 29 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை குறித்த வீட்டுக்குள் நுழைந்த இரு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு பணம், 10 பவுண் நகைகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர்களால் பொல்லால் தலையில் தாக்கப்பட்ட 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .