2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முதிரைக் குற்றிகளுடன் கப் ரக வாகனம் மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ஓமந்தை, பாலமோட்டைப் பகுதியில், ,இன்று (05) அதிகாலை சட்டவிரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனமொன்றை, புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். 

 கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், கப் ரக வாகனத்தில், முதிரைக்குற்றிகள் ஏற்றிக் கொண்டு சென்ற நபர்களை துரத்திச் சென்றபோது, அவர்கள் வாகனத்தைக் கைவிட்டு, காட்டுப் பகுதிக்குள் தப்பித்துச் சென்றுவிட்டனர். 

 இதையடுத்து, ​கைவிடக்கட்ட கப் ரக வாகனத்தையும் அதிலிருந்த 7 அடி நீளமுடைய 12 முதிரைக் குற்றிகளையும் கைப்பறிய விசேட அதிரடிப் படையினர், அவற்றை ஓமந்தைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .