2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

முன்னாள் போராளிகளுக்கான உதவித் திட்ட கலந்துரையாடல்

Editorial   / 2017 ஜூலை 04 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கான உதவிகளை வழங்கும் திட்டத்தில், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இவ்வாண்டுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்களைப் பெறும் பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் இன்று (04) இடம்பெற்றது.

கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் தலைமையில், ஏ-9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், போராளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் திட்டங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டு, வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்து, ஒரு மாவட்டத்துக்கு 60 பயனாளிகள் வீதம், முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு, தலா 50,000 ரூபாய் வீதம் உதவித் தொகைகள் வழங்கப்படவுள்ளன.

அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 60 பயனாளிகளுக்கும், சரியான திட்டத்தினை தெரிவு செய்வது தொடர்பாக நேர்முகத் தேர்வுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .