2025 மே 16, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி கட்டடம் அமைக்கும் பணி ஆரம்பம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பச்சிலைப்பள்ளி  பிரதேச சபையால் முன்பள்ளி கட்டடம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில்  உள்ள வறிய மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் ஆரம்ப கல்வியை மேம்படுத்தும் விதமாக நவீன கற்றல் முறைகளுடன் கூடிய ஒரு மாதிரி முன்பள்ளியாக சபை நிதியில், ரூபாய் 2.5 மில்லியன் செலவில் இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பிரதேச மக்களின்  நீண்டகால எதிர்பார்க்கையை  நிறைவேற்றும் வகையில் இந்தப் பணிகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.

பிரதேசத்தின் ஆரம்ப பிரிவு மாணவர்களை நவீன உலகின் போட்டி சூழலுக்கு ஏற்ற வகையில், தயார் செய்து, பாடசாலைக்கு அனுப்புவதன் மூலம் பிரதேசத்தின் கல்வி மட்டத்தை உயர்த்த முடியுமென, அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .