2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

முன்பள்ளிக் கூரைகள் பறந்தன

Yuganthini   / 2017 ஜூன் 27 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி - உதயநகரில் இன்று (27)  முற்பகல் 11.30 மணியளவில் வீசிய பலத்த  காற்றினால், அப்பகுதியில் அமைந்துள்ள சிறுவர் முன்பள்ளியின் கூரை தூக்கியெறியப்பட்டது.

இதன்போது, குறித்த  கட்டடத்துக்குள் மூன்று ஆசிரியர்களும் 30க்கும் மேற்பட்ட மாணவர்களும் இருந்தனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக, அவர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, குறித்த முன்பள்ளிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கிராம மட்ட அமைப்புகள், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் நடந்த சம்பவம் தொடர்பாகவும் இதற்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பாவும் ஆராய்ந்தார்.

இதன்போது, குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், குறித்த முன்பள்ளியை புனரமைத்துத் தருவதாக உறுதியளித்தனர். குறித்த முன்பள்ளி, எவ்வித அடிப்படை வசதிகள் இன்றிய நிலையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .