Freelancer / 2021 டிசெம்பர் 11 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கடலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீராடிக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் விடுமுறை நாட்களில் வெளியிடங்களில் இருந்து வரும் பல இளைஞர் யுவதிகள் கடலில் இறங்கி நீராடிவருகின்றமை வழங்கம்.
அபாய கடல் பகுதி என்ற எச்சரிக்க பதாதைகள் சில இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதும் முல்லைத்தீவு கடல் தொடர்பில் சுற்றுலாவிற்கு வரும் மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது.
தற்போது கடல் அடி அதிகமாக காணப்படும் மாதமாக ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதி காணப்படுகின்றது.
இந்த நிலையில் முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரைக்கு வரும் மக்களுக்கான சரியான வழிகாட்டல்கள்,மற்றும் அறிவுறுத்தல்கள் எவையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களாலோ அல்லது சமூக அக்கறைகொண்ட அமைப்புக்களாலோ வழங்கப்படவில்லை.
கடற்கரை பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்றினை அமைக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இந்தவார விடுமுறையில் மக்கள் கூடுவார்கள் என்பதனை கருத்தில் கொண்டு கடற்கரை அருகில் உள்ள பாதுகாப்பு தரப்பினரால் கடற்கரை பகுதியில் 6 இடங்களில் சிவப்பு கொடிகள் பறக்கவிடப்பட்ட கம்பங்கள் நாட்டிவைக்கப்பட்டு கண்காணிப்புக்கள் போடப்பட்டுள்ளன.
கடலில் எவரும் இறங்கவேண்டாம் என்ற எச்சரிக்கையாகவே இந்த கொடிகள் கடற்கரையில் பறக்கவிடப்பட்டுள்ளன.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago