Niroshini / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
'மீன்பிடியில் தடைசெய்யப்பட்ட முறைகள் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்து' என்ற தலைப்பில், முல்லைத்தீவு நகரின் பல்வேறு பகுதிகளிலும், இன்று (27) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'1996 இல.2 சட்டத்தின் படி, தற்போது இருக்கும் சட்ட திட்டங்களை நடைமுறைபடுத்த ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்போம்', 'மீனவ கொள்கை ஒன்றை வகுத்து அதை நடைமுறைபடுத்தி நீரியல் வனங்களை பாதுகாப்போம்' எனவும் 'லைட்கோஸ் லைலா - சுருக்குவலை டைனமைட் பயன்படுத்தி மீன்பிடித்தல், தங்கூஸிவலை - இழுவை மடி வலை மற்றும் சட்டத்தின்படி பயன்படுத்தாத கோஸ் வலை உள்ளடங்களாக மீனவ கட்டளைச் சட்டங்களில் தடைக்குட்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கு (வரையரைகளுக்கு) உள்ளான மீன்பிடி முறைகள் மீனவ மற்றும் இயற்கை வளங்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா?
இருப்பினும் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஏனும் நடைமுறைபடுத்துவதில்லை என்பது உமக்கு தெரியுமா?' எனவும், அந்தச் சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
32 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
32 minute ago
37 minute ago
47 minute ago