2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

முல்லை போக்குவரத்து அலுவலகத்துக்கு பூட்டு

Niroshini   / 2021 நவம்பர் 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும், இன்று(11) முதல் மறு அறிவித்தல் வரை, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என, மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் உறுப்பினர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அலுவலக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கும் திகதி, எதிர்காலத்தில் தங்களுக்கு அறியத் தரப்படும் என்றும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X