Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 22 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில், சாரதிகளுக்கான விடுதி அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆறு மில்லியன ரூபாய்; நிதி, விடுதி அமைக்கப்படாது திறைசேரிக்கு திரும்புவதாக, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சாரதிகளுக்கான விடுதி அமைப்பதற்காக, மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக பல வழிகளில் நிதிகளை ஒதுக்கி இருந்தாலும் கூட, வைத்தியசாலை நிர்வாகத்துக்கு, விடுதி அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை என்றார்.
இந்நிலையில், கட்டம் கட்டமாக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் ஆறு மில்லியன் ரூபாய் நிதி, தற்போது திறைசேரிக்கு திரும்புவதாகவும், அவர் தெரிவித்தார்.
நிதி கையிருப்பில் உள்ள போதும், வேலைத்திட்டங்களை அனுமதிக்காமல், மாகாண சுகாதார அமைச்சு இழுத்தடிப்புகளை மேற்கொண்டதன் காரணமாகவே, சாரதிகளுக்கான விடுதியை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தவிசாளர் குற்றஞ்சாட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago