Niroshini / 2021 நவம்பர் 11 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
கடந்த மூன்று நாள்களாக பெய்த மழை வெள்ளத்தினால், முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட பதில் பிரதிமாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன், பாதிப்பு விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் விவசாய திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறனார்.
இன்று வரை, மாவட்டத்தில் 2,180 ஏக்கர் நெற்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வும், அவர் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை 53 ஆயிரத்தி 255 ஏக்கர் நெற்செய்கையை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட போதும், 38 ஆயிரத்தி 370 ஏக்கர் பயிர்செய்கையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.
"முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா பிரதேசங்களின் கீழ் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
"கடந்த மூன்று நாள்களாக பெய்த மழை காரணமாக 2,180 ஏக்கர் அளவான நெற்பயிர்ச் செய்கை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று (11) மழை குறைவடைந்து காணப்படுவதால் முழுமையான பாதிப்பு என்று கூறமுடியாது. சில பிரதேசங்களில், 15 நாள்கள் பயிர்களாகவும், சில இடங்களில் 25 தொடக்கம் 30 நாள்கள் பயிராகவும் காணப்படுகின்றன.
"சில விவசாயிகளின் வயல்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன. மீண்டும் அவர்கள் மறுத்து விதைக்க தீர்மானித்துள்ளார்கள். அவர்களுக்கு மூன்று மாதம் அல்லது இரண்டரை மாத நெல்லினை விதைக்க பரிந்துரைசெய்துள்ளோம்.
"மழைவெள்ளம் வடிந்தோடி வருகின்றன. குறிப்பாக, நந்திக்கடல், சாலைக்கடல் மற்றும் முல்லைத்தீவு நகர்பகுதி, நாயாற்று கடல்நீர் ஏரி, மன்னாகண்டல், மல்லிகைத்தீவு, பேராறு போன்ற ஆற்றங்கரையினை அண்மிய பகுதிகள் தாழ்நில பிரதேசங்களில் தற்போது நீர் வடிந்தோடி வருகின்றன. பெரியளவில் பாதிப்பு இல்லாத நிலையில், விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்" என்றார்.
22 minute ago
26 minute ago
39 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
39 minute ago
10 Nov 2025