Niroshini / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவின் இருவேறு பகுதிகளில், இன்று (30) இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முள்ளியவளை - நாவல்காட்டுப் பகுதியில் ஆணின் சடலமும் கள்ளப்பாடு தெற்கு பகுதியில், பெண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளன.
நாவல்காட்டு கிராமத்தில், பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து, உருக்குலைந்த நிலையில், ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாடு மேய்ப்பதற்காக அவ்வழியே சென்ற சிலர், கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து, கிணற்றை எட்டிபார்த்தனர். இதன் போதே, உருக்குலைந்த நிலையில், கிணற்றில் சடலம் இருப்பதை அடையாளங்கண்டனர்.
இதேவேளை, கள்ளப்பாடு தெற்கு பகுதியில், இன்று (30), 34 வயது குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025