2025 மே 22, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் கடும் காற்று

Editorial   / 2019 மே 10 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், நேற்று வீசிய கடும் காற்றால், மக்களின் வீடுகள் மற்றும் மீனவர்கள் வடிகள் பல தூக்கி வீசப்பட்டுள்ளன.

நேற்று மாலை, முல்லைத்தீவு - செம்மலைகிழக்கு தொடக்கம் கொக்குளாய் வரையான பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.

இதன்போது, கடும் காற்றால் செம்மலை கிழக்கு கடற்கரைப் பகுதியில் 8 மீனவர்களின் வாடிகளும் மீனவர்களின் வழிபாட்டு தேவாலயம் ஒன்றும் தூக்கி வீசப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக காலநிலை மாற்றத்தால் சரியான முறையில் கடற்றொழில் செய்யமுடியாத நிலையில், செம்மலை கிழக்கு நாயாற்றுப்பகுதி மீனவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் இயற்கையின் சீற்றம் அடிக்கடி கரையோர பகுதிகளை தாக்குவதால் தொடர்ந்தும் இயற்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்தாண்டு இதேபகுதி, மீனவர்களின் வாடிகள் எரியூட்டப்பட்டும் அதற்கான நிவாரணங்கள் எவையும் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், தற்போதும் கடும் காற்றால் வாடிகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. அதிகாரிகள் வருகின்றார்கள், பாக்கின்றார்கள், செல்கின்றார்கள். ஆனால், எதுவும் எங்களுக்கு நடக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கிழக்கு பகுதியில், ஒரு வீடு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளது.

கருநாட்டுக்கேணிப் பகுதியில் ஒரு வீடும் கொக்குத்தொடுவாய் தெற்கு பகுதியில் ஒரு வீடுமாக மக்களின் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காற்றால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றம் வாடிகளை சென்று பார்வையிட்டு மதீப்பீடுகள் செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X