Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்,சண்முகம் தவசீலன்
தேசிய சுனாமி ஒத்திகை நடவடிக்கை தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், இன்று (03) நடைபெற்றது.
இலங்கை இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தில் ஏற்பாட்டில், முல்லைத்தீவு, காலி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை (05) தேசிய சுனாமி ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டவுள்ள ஒத்திகை தொடர்பிலேயே, இந்த முன்னாயத்தம் கலந்துரையாடல் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், முப்படையினர், பொலிஸார், பிராந்தியச் சுகாதார பணிமனை அதிகாரி, வலயக் கல்விப் பணிமனை அதிகாரி, கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி, பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலகர்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்டத்தின் சுனாமி ஒத்திகை பகுதியாக வட்டுவாகல் தொடக்கம் செல்வபுரம், மணல்குடியிருப்பு, கோவில்குடியிருப்பு, முல்லைநகர் மற்றும் வண்ணாங்குளம் ஆகிய 6 கிராமசேவை பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள கரையோர மக்கள் அனைவரையும் புதன்கிழமை (05) காலை சுனாமி ஒத்திகை ஊடாக கிராமத்தில் இருந்து வெளியேற்றி, அவர்களை அப்புறப்படுத்தி, அவர்களுக்கான சகல ஏற்பாட்டு உதவிகளும் வழங்கும் ஒத்திகை நிகழ்வு நடைபெறும்.
இதனால் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
51 minute ago
1 hours ago