2025 மே 09, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் நகரசபை உருவாக்கத் திட்டம்

Niroshini   / 2021 ஜூலை 01 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் - முல்லைபட்டினம், முல்லையூர் ஆகிய இரு வட்டாரங்களையும் இணைத்து, முல்லைத்தீவு நகரசபை உருவாக்கப்படவுள்ளதாக,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நகரசபை உருவாக்கப்படும் போது,  இந்த இரு வட்டாரங்களுக்குள்ளும் இருக்கின்ற தனியார் ஆவணங்கள் பெறப்படாத காணிகள் அரச உடமையாக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று (30) நடைபெற்றது. இதன் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 
அத்துடன், இந்த இரு வட்டாரங்களிலும் காணிகளுக்கு ஆவணங்களின்றி இருக்கின்ற மக்களுக்கு விரைவில் ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முல்லைப்பட்டின வட்டார உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை மற்றும், முல்லையூர் வட்டார உறுப்பினர் வைத்திலிங்கம் கெங்காதரன் ஆகியோருக்கு தவிசாளர் க.விஜிந்தன் வலியுறுத்தியுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X