Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக, இவ்வாண்டு 2461.825 ரூபாய் நிதி கிடைக்கப்பெற்று அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்டச் செயலகத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழிப்பேரலையினாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு நிதியொதுக்கீடுகள் ஊடாக அபிவிருத்திவேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மீள்குடியேற்றம், கல்வி, சுகாதாரம் உட்கட்டமைப்பு வசதி, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டில் மேற்படி நிதி கிடைக்கப்பெற்று அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மாவட்டச் செயலகத் தவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் கிராமசக்தி வேலைத்திட்டம், கம்பரலிய வேலைத்திட்டம்.. கிராமிய உட்கட்டமைப்பு, அபிவிருத்தி மீள்குடியேற்ற அமைச்சு, தேசிய நல்லிணக்க அமைச்சு உள்ளிட்ட பத்து வரையான நிதியொதுக்கீடுகளின் மூலம் 2,461.825 ரூபாய் நிதி கிடைக்கப்பெற்று, அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதாக, மாவட்டச் செயலக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025