2025 மே 08, வியாழக்கிழமை

முல்லைத்தீவு காணிப் பிரச்சினை: ஆவணங்களைச் சேகரிக்கிறார் சுமந்திரன்

Gavitha   / 2020 நவம்பர் 04 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிப்பிரச்சனைகள் தொடர்பிலானத் தகவல் திரட்டும் நடவடிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டுள்ளார்

நேற்று (03) முல்லைத்தீவுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினரைச் சந்தித்து கலந்துரையாடி, ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்குச் சொந்தமானக் காணிகளில் விவசாயம் செய்வதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத்திணைக்களம் தடை விதித்து வந்துள்ளது என்றும் இந்தக் கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறு, உத்தரவிட்டுள்ளமையால், சிறு காலஅவகாசம் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

சொந்த காணிகளில் விவசாயம் செய்யமுடியாமலுள் பிரச்சனை தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பல ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் இதனால் சிறிய தாமதம் ஏற்பட்டாலும் வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X