Niroshini / 2021 ஜனவரி 25 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கான இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்புக்கான இ.போ.ச பஸ் சேவைகள், நேற்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, புதுக்குடியிருப்பில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் பஸ், முல்லைத்தீவு, வவுனியா ஊடாக அடுத்த நாள் அதிகாலை கொழும்பைச் சென்றடையும்.
பின்னர் அதே பஸ், கொழும்பில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, முல்லைத்தீவு வழியாக புதுக்குடியிருப்பைச் சென்றடையுமென்று, இலங்கைப் போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலையினர் அறிவித்துள்ளனர்.
22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
40 minute ago
59 minute ago