2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி ஓய்வு

Princiya Dixci   / 2021 ஜூன் 25 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமாக இருந்த மேஜர் ஜெனரால் உபாலி ராஜபக்ஷ, இரணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் தினமான கடந்த 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ 1987ஆம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்து, நேரடியாக கொமாண்டோ படையணியில் சேர்ந்தார். அத்தோடு, அவர் இராணுவத் தலைமையகத்தில் நடவடிக்கை பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

இவர் பல துணிச்சலான மீட்புப் பணிகள், பணயக் கைதிகளை விடுவித்தல், அடாவடிக் கும்பல்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் முன்நின்று செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .