Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவில், மாவட்ட அளவிலான முதியோர் நாள் நிகழ்வுகள், சமூகசேவைத் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா, ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டதோடு, முதியோர்களது கலை நிகழ்வுகளும், முதியவர்கள் தமக்கு சமூகத்தின் மத்தியில் ஏற்படும் பிரச்சினை தொடர்பிலும் உரையாடல்களை நிகழ்த்தினர்.
அத்தோடு, முல்லைத்தீவு மாவட்ட சமூக மேம்பாட்டு நிறுவன தலைவர் திரு.கலிற்றன் - சாம் அவர்களின் தலைமையிலும், சமூக மேம்பாட்டு நிறுவன உறுப்பினர் திரு.கிருசுணபிள்ளை, தவராசா அவர்களின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், முதியோர்கள் பலர் பாட்டுப்பாடி, கோவலன் கூத்து, காத்தவராயன் கூத்து என்பவற்றை நடித்தும் தமது கலைப் புலமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் முதியவர்கள் தாம், பேருந்து பயணங்களிலும், வைத்தியாலை போன்ற பொது இடங்களிலும் எதிர் நோக்கும் இடர்பாடுகள், பிரச்சினைகளையும், மாதாந்த உதவிப் பணம் பலருக்கு கிடைப்பதில்லை என்ற குறைகளையும் முன்வைத்தனர்.
குறித்த இந்நிகழ்வில் விருந்தினர்களாக, வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேசுவரன், முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு. நடராசா தசரதன் ஆகியோர் கலந்துகொண்டதுடன், முதியவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
17 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
56 minute ago