2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘முஸ்லிம்களை துன்புறுத்தக்கூடாது’

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

சாதாரண கைதுகள் ஊடாக இஸ்லாமிய இளைஞர்கள் தடுத்து வைக்கப்படவோ, துன்பறுத்தப்படவோ கூடாதென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா கருமாரி அம்மன் கோவிலில், நேற்று (23) இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுடைய ஆத்ம சாந்திக்காக ஒவ்வொரு கோவில்களிலும் பூசைகள் இடத்றெ வேண்டுமெனவும் எதிர்வரும் காலங்களிலும் உயிர்களைப் பாதுகாப்பதற்கு இந்த அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

அதனூடாகதான் இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் முறியடிக்கப்படுமெனவும், அவர் கூறினார்.

இந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு, ஐ.எஸ்.ஐ என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் உரிமை கோரியுள் நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் தடுத்து வைக்கப்படவோ, துன்பறுத்தப்படவோ கூடாதெனவும், அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மக்களுடைய கைதுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலி என்பன தங்களுக்கு தெரியும் என்பதால், அந்த வலியை சாதாரண இஸ்லாமிய மக்களும் அனுபவிக்க கூடாதென, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .