2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மூங்கிலாறு சிறுமி மரணம்: மேலும் மூவரிடம் விசாரணை

Niroshini   / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - மூங்கிலாற்று பகுதியில் உயிரிழந்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், சிறுமியிக் குடும்பத்தில் இருந்து மேலும் மூவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் தாய், தந்தை, அக்கா ஆகியோரே, நேற்று  (20) பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், சிறுமியின் அக்காவின் கணவரை பொலிஸார் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய, அவரை 72 மணத்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள், நேற்று. உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று, அங்குள்ள பார்வையிட்டுள்ளதுடன், கிராமத்தில் பெண்கள்  மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் தெரிவித்த கருத்துகளையும் கேட்டறிந்துகொண்டனர்.

அத்துடன், மேற்படி சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி, நேற்று, மூங்கிலாறு மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X