Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள இரு கிராமங்களையும் இன்று மாலை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில் கடந்த 7ஆம் திகதியன்று, மாவட்ட பொதுவைத்தியசாலையில் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 9ஆம் திகதி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த நபருடன் ஒன்றாக இருந்து முதலாவது நபர் என அடையாளம் காணப்பட்ட 41 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றார்.
இவர்களின் 8 பேருக்கு இது வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த 8 பேருக்கும் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதென்றார்.
“இதனை விட இவர்களுடன் தொடர்பு பட்ட இரண்டாம் நிலை தொடர்பு உள்ளவர்கள் என கூறப்படுகின்றவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
“மன்னார் மாவட்டத்தில் இது வரையில் முதல் நிலை தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 103 பேரும், இரண்டாம் நிலை தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 150 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
“தொற்றுறுதி என அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 7 பேர் பட்டித்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டட நிர்மாண பகுதியிலே தங்கியுள்ளனர்.
ஒருவர் மன்னார் நகரில் வரையறுக்கப்பட்ட வீடு ஒன்றில் தங்கி இருந்தார். இவர்களில் 5 பேர் நேற்று இரவு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவரையும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“பட்டித்தோட்டம் பகுதியிலும் மேலும் ஒருவர் மன்னார் நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்தார். அவர்களுடன் தொடர்புபட்டவர்களை கண்டு பிடிப்பதற்காக பட்டித்தோட்டம் மற்றும் மன்னார் பெரியகடை போன்ற பகுதிகளை தற்காலிகமாக மூடியுள்ளோம்.
“முழுமையான நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை குறித்த பகுதிகளை மீண்டும் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
13 minute ago
22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
40 minute ago