Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 08 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பிரதேசங்களில், மூன்று நாள்களாக, காலை வேளையிலும் மாலை வேளையிலும், மூடுபனிமூட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக மழைபெய்துள்ளதைத் தொடர்ந்து, வானமூட்டம் மப்பும் மந்தரமுமாகக் காணப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு மேலாக, காலை 8.30 மணிவரையும் மாலை 4.30 மணிதொடக்கம் பனிமூட்டமான நிலமையைக் காணக்கூடியதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வீதியில் பயணிப்பவர்கள், பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். முல்லைத்தீவு நந்திக்கடல் கரையின் மறுபகுதியைக் காணமுடியாதவாறு பனிமூட்டம் படர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முள்ளிவாய்கால் போன்ற கரையோர பகுதிகளிலேயே, அதிகளவான பனிமூட்டத்தை அவதானிக்க முடிந்துள்ளது.
எனவே வானிலையைக் கருத்திற்கொண்டு, வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago