2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மூதாட்டியின் கையைப் பிடித்தவருக்கு மறியல்

Editorial   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கோவிலில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 73 வயது வயோதிபப் பெண்ணின் கையைப் பிடித்த நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று, பூநகரியில் இடம்பெற்றுள்ளது.

பூநகரிப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில், சித்திரைப் புதுவருடத்தினத்தன்று (14) துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த வயோதிபப் பெண்ணை, அப்பகுதிக்கு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கையைப்பிடித்து இழுக்க முயன்றுள்ளார்.

சந்தேக நபரின் பிடியிலிருந்த தப்பியோடிய குறித்த வயோதிபப் பெண், அது தொடர்பில் அங்கிருந்த பொதுமக்களிடம் தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, சந்தேக நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவரை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் திங்கட்கிழமை (15) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை ஏப்ரல் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு அவ​ரை உட்படுத்துமாறும் உத்தரவு பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .