Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, மூன்றுமுறிப்பு கிராமத்துக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் சுமார் 196க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாடம் சொல்லனத்துன்பங்களை அனுபவித்து வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகக் காணப்படும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய கிராமமாக காணப்படும் மூன்று முறிப்பு கிராமத்திற்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் குறித்த கிராமத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதாவது, மூன்று முறிப்பு கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள வீரப்பிராயர்குளம், இளமருதன்குளம், மூன்றுமுறிப்பு, கொம்புவைத்தகுளம் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது 196 குடும்பங்களைச்சேர்ந்த 611 பேர் வரையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி கிராமத்துக்கான போக்குவரத்து வசதிகள் இன்மை பிரதான வீதி புனரமைக்கப்படாமை என்பவற்றால் இப்பகுதி மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதாவது, குறித்த கிராமத்தில் எதுவித அடிப்படை வசதிகளும் இன்மையால் கிட்டத்தட்ட 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாண்டியன்குளம் அல்லது அதற்கு அப்பால் சென்று தமது தேவைகளை நிறைவு செய்யவேண்டிய நிலையில் குறித்த கிராத்திற்கான பிரதான வீதி நீண்டதூரம் காட்டுப்பாதையாக காணப்படுவதால், இரவு வேளைகளில் பயணம் செய்யமுடியாது காட்டுயானைகளின் தொல்லை அதிகளவில் காணப்படுகின்றது.
இவ்வாறு துன்பங்களை அனுபவித்து வரும் தங்களின் நிலையினை கருத்திற்கொண்டு, பிரதான வீதியை புனரமைத்து தருமாறு, பிரதேசமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 minute ago
37 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago
38 minute ago
1 hours ago