2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

“மெய்யான தலைவர்கள்” பதாகைகளை அகற்ற முற்பட்டவருக்கு பிணை

Editorial   / 2023 நவம்பர் 28 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் மீது சேறு பூசும் விதமாக காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்ற முற்ப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்தை செய்திசேகரித்துக்கொண்டிருந்த சுதந்திர ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். 

வவுனியா தலைமைபொலிஸ் நிலையத்திற்கு மிக அருகாமையில்  தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுடன் இணைந்து செயற்பட்ட சிலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

 “மெய்யான தலைவர்கள்” என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறித்த பதாதைகளில் விடுதலைப்புலிகளால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. 

குறித்த பதாதைகள் மக்கள் மத்தியில் குழப்பநிலையினை ஏற்ப்படுத்தும் என்ற காரணத்தினால் முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன்  குறித்த பகுதிக்கு சென்று இவற்றை அகற்றுமாறு தெரிவித்தார்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிஸார் அவரை, வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர். அவர் மீது ஆத்திரத்தை தூண்டி குழப்பத்தை ஏற்ப்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கும் தாக்கல்செய்திருந்தனர். 

கைதுசெய்யப்பட்டவர்  நீதிமன்றில் இன்று (28) முற்ப்படுத்தப்பட்டதுடன்,அவருக்கு பிணை வழங்கி நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தினை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரும் வவுனியா ஊடகஅமையத்தின் தலைவருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் பொலிஸார் பக்கச்சார்பான முறையில் அதே வழக்கினை தாக்கல்செய்துள்ளனர். இதனால் அவரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கில் முன்னாள் போராளி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் பத்திற்கும் மேற்ப்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X